TamilsGuide

மருந்துகளின் தரக் குறைபாடுகளில் சரிவு

2023 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மருந்து தரக் குறைபாடுகளை விட, 2024 ஆம் ஆண்டில் பதிவான மருந்துகளின் தரக் குறைபாடுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தரக் குறைபடாக பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

தர சோதனைகளில் தோல்வியடைந்த மருந்துகளில், அண்ணளவாக  47 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகவும், 12 மருந்துகள் உள்நாட்டில் (இலங்கையில்) தயாரிக்கப்பட்டவையாகவும், மற்றவை சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தர சோதனைகளில் தோலிவியடைந்ததாக பதிவாகி இருக்கும் மருந்துகள் மற்றும் அதன் இறக்குமதி அனைத்தும் இடைக்கலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தர குறைவான மருந்துகள் காரணமாக 2023 ஆம் ஆண்டில் பல இறப்பு பதிவுகள் பதிவாகி இருந்த நிலையில், அதே ஆண்டில்தான் அதிகமான தர குறைபாடுகள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது பதிவாகிய மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 124ஆக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

அதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை காலமும் 13 விதமான மருந்துகள் தர சோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக கடுமையான விதிமுறைகளை நடைமுறை படுத்த போவதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a comment

Comment