தண்டனை அமெரிக்காவில் நாய்களை கொடூரமான முறையில் சித்திரவதை செய்த நபர் ஒருவருக்கு சுமார் 500 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஜோர்ஜியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
57 வயதான வின்சென்ட் டிமார்க் என்ற நபருக்கு டலாஸ் நீதிமன்றம் 475 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
சுமார் நூறு பிட்புல் ரக நாய்களை குறித்த நபர் தனது வீட்டின் கொள்ளை பகுதியில் சங்கிலிகளினால் கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் நாய்களுக்கு உரிய முறையில் உணவு வழங்கவில்லை எனவும் நாய் சண்டையில் ஈடுபடுவதற்காக இந்த நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு நீதிமன்றம் இந்த சிறை தண்டனையை விதித்துள்ளது. இந்த நபருக்கு எதிராக சுமார் 103 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு வழங்காமல் சங்கிலிகளினால் கட்டிப்போட்டு நாய்களை கோபத்தை தூண்டி அவற்றை சண்டைக்கு பயிற்றுவித்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.


