TamilsGuide

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி படத்தின் பெயரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி ஏற்கனவே நடித்திருந்த படத்தின் தலைப்பு மற்றும் தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஆர்.பி.எம். என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி. சுனில், சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயாபிரசாத் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசை அமைத்திருக்கிறார். தாமரை, மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுத சிட்ஸ்ரீராம் பாடி இருக்கிறார்.

மேலும் படத்தின் தயாரிப்பாளரான கல்பனா ராவேந்தர், புரோக்கன் ஆரோ என்ற ஆங்கில பாடலுக்கு முதல் முறையாக இசையமைத்து பாடல் எழுதி பாடி இருக்கிறார். கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் கதைகளத்தில் படத்தை சோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில், நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Leave a comment

Comment