TamilsGuide

அஜித்துக்காக விசில் அடித்து கொண்டாட நான் ஓடோடி வருவேன் - உற்சாகமாக பேசிய விவேகம் வில்லன்

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது.

முன்னதாக துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. இதனிடையே நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விவேகம் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய், அஜித் குறித்து உருக்கமாக பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், "அஜித் அண்ணா எப்படி இருக்கீங்க? உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கவேண்டும். உங்கள் வழியைதான் நான் பின்பற்றி வருகிறேன். கடந்தமுறை நீங்கள் ரேஸில் பங்கேற்றபோது உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. அடுத்தமுறை எனக்கு போன் செய்தால் உங்களுக்காக விசில் அடித்து கொண்டாட நான் ஓடோடி வருவேன்" என்று தெரிவித்தார். 
 

Leave a comment

Comment