TamilsGuide

அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிப்போம்! – நாமல் ராஜபக்ச

அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

`நாமலுடன் கிராமத்துக்கு கிராமம்` எனும் தொனிப்பொருளில் அநுதாரபுரத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு
அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது. இந்த பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக
அரசியல் கைதுகளை தற்போது முன்னெடுக்கின்றனர்.

எனக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்திலும்
எமக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் எந்த குற்றச்சாட்டுக்களும் சட்டத்தின் முன் நிரூபிக்கப்படவில்லை.

நீதிமன்றத்தின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிப்போம். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக விசாரணை கட்டமைப்பை பலவீனப்படுத்துவதையும்,
அச்சுறுத்துவதையும் அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் பலவீனத்தை கிராமத்துக்கு கிராமம் என்ற செயற் திட்டத்தி ஊடாக மக்களுக்கு நாம் எடுத்துரைப்போம்.

கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம். ஆகவே பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம்” இவ்வாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment