TamilsGuide

My Lord படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சசி குமார்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராவார் ராஜு முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்கஸ் , ஜிப்ஸி ஆகிய திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஜப்பான் திரைப்படம் . ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் இன்று வெளியிட்டார். அதில் சசிகுமாரும் சைத்ராவும் பீடி பிடிக்கும் புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் சசிகுமார். இதனை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளனர் படக்குழு.
 

Leave a comment

Comment