TamilsGuide

ரொறன்ரோவில் காச நோயாளர் எண்ணிக்கை உயர்வு

ரொறன்ரோவில் காச நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2024ம் ஆண்டில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளின் பின்னர் காச நோயாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் 375 பேருக்கு காச நோய்த் தொற்று ஏற்பட்டதாக ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

காச நோய் ஆபத்தானது எனவும் அதனை தடுக்க முடியும் எனவும் மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

காச நோயினால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு பழங்குடியின சமூகத்தினர் செல்வதனால் நோய்த் தொற்று அவ்வாறு தாக்கமுறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a comment

Comment