TamilsGuide

வடக்கு மாகாண முதலீட்டாளர்களை சந்தித்த இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், பிரித்தாணியா இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட், இலங்கைக்கான பிரித்தாணியா தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இடம்பெற்றுள்ளது

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தைப் பார்வையிட்ட பின்னர் அங்குள்ள கேட்போர்கூடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதுடன் இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்

இதில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment