TamilsGuide

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் – அரசாங்கம் அறிவிப்பு

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.

இன்று (28) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கனவே சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாகவும், அது விரைவில் சபையில் அறிவிக்கப்படும்.

மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 

Leave a comment

Comment