TamilsGuide

தரையிறக்கப்பட்ட 3 விமானங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 9 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட்டதாக தகவல்

எஞ்சின் உதிரி பாகங்கள் இல்லாததால், மூன்று விமானங்கள் தரையிறக்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், மூன்று வருடங்களுக்கான குத்தகைத் தொகையாக ஒரு மாதத்திற்கு 9 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.2.6 பில்லியன்) செலுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விமானங்களில் ஒன்று தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

புதிய அரசாங்கம் விமான சேவையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டது.

மேலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய விமான நிறுவனம் 2023/2024 இல் 3 பில்லியனுக்கும் அதிகமான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுதி உயர்வால் கிடைத்த இலாபம் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
 

Leave a comment

Comment