TamilsGuide

இரவு நேர இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது -நலிந்த ஜயதிஸ்ஸ

இரவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளின் நேரம் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால்  விசேட கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளதாகவும்  சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இதன்போது  ”இசை நிகழ்ச்சிகளையோ அல்லது அவற்றின் நேரத்தையோ நிறுத்த அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், நீதிமன்ற தீர்ப்புகளின்படி மட்டுமே அது செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சுற்றுலாத் துறைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் இது தொடர்பான  திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறிய அமைச்சர், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசாங்கம் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின்  கடந்த 22 நாட்களில் மாத்திரம்  177,403 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும்  அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment