TamilsGuide

2வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது

மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் மண்டப கதவினை திறந்து மாணவர்களை வெளியேற்றியிருந்தார்.

இந்த நிலையில் கதவின் பூட்டை உடைத்த குற்றச்சாட்டில் மாணவர்கள் ஐவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை நிர்வாக மட்டத்தில் இருந்து இதுவரை எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்

அத்துடன் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்
 

Leave a comment

Comment