TamilsGuide

புஷ்பா 2 இயக்குநர் சுகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.

இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1850 கொடுக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று 'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் அவருடைய அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத் விமானநிலையத்தில் இருந்து இயக்குநர் சுகுமாரை அவரது வீட்டிற்கு அழைத்து வந்த வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது என்ன கிடைத்தது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
 

Leave a comment

Comment