TamilsGuide

அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பத்தாரிகளின் வீடுகளுக்கு வருகை தந்து தகவல் சேகரிப்பு செய்யும் நிகழ்ச்சித் திட்டம் நாடு பூராகவும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மட்டக்களத்தரவை-2 கிராம சேவகர் பிரிவில் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவினால் உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா,உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,அம்பாறை மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், அஸ்வெசும திட்டத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் டி.எம் குணசேகர,அபிவிருத்தி உத்தியோகத்தர் எப்.ஜெஸீலா,கிராம சேவகர் எம்.பரீட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
 

Leave a comment

Comment