TamilsGuide

அரிசி ஆலைகளை இராணுவம் கண்காணிக்கும் -ஜனாதிபதி தெரிவிப்பு

அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரிசி ஆலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”பாரிய நெல் ஆலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாவிட்டால், நெல் ஆலையில் உள்ள தமது கடைக்கு அரிசி கொண்டு செல்லும் வரை இராணுவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும்  ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன் அரிசி தேசிய சொத்து என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் இதுவரை எந்தவிதமான நியாயமற்ற விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் மில் உரிமையாளர் எவரேனும் இதற்கு இணங்காவிட்டால், ஆலையை இராணுவத்தினர் கையகப்படுத்தி அரிசி உற்பத்தி செய்து சந்தைக்கு விடப்படும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.

தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட ஒரு சதம் அதிகமாக அரிசி விற்பனை செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும்  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment