TamilsGuide

மருதானை பொலிஸ் நிலையத்தில் பெண் தற்கொலை

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ஆவார்.

இந்தச் சம்பவம் இன்று (22) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment