கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிற்கு அருகில் உள்ள 24 அனுமதியற்ற வீடுகளில் வசிப்பவர்களை நீதிமன்ற உத்தரவுக்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபை நேற்று (21) வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கொலன்னாவை பிரதேசத்தில் குடியிருப்புகள் வழங்கப்பட்ட போதிலும் குறித்த இடத்தை விட்டு வெளியேறாத குழுவினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அளுத்கடை இலக்கம் 5 நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த குழுவை நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.