TamilsGuide

மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறையில் பொதுமக்கள் நூதனப் போராட்டம்

அம்பாறை மாவட்டம்,பெரிய நீலாவணை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  நேற்றைய தினம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  விளக்குமாறினை ஏந்தி  நூதனமான முறையில்  போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய பொதுமக்கள்
பெரிய நீலாவணை பகுதியில் புதிய மதுபானசாலை வேண்டாம் என வலியுறுத்தி விளக்குமாறுடன்  குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜிடம்  பொதுமக்கள் மகஜர் ஒன்றினையும்  கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment