அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின் பதவியேற்பு விழா கொண்டாட்டத்தில் நடனமாடி கேக் வெட்டிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் நேற்று (20) ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில், 70களின் டிஸ்கோ ஹிட் பாடல்கள் மீதான அவரது ஆர்வம் முழுமையாக வெளிப்பட்டது.
கேக் வெட்டும் விழாவில் டிரம்பிற்கு ஒரு வாள் வழங்கப்பட்டது. அவர் கையில் வாளுடன் நடனமாடத் தொடங்கியபோது, அங்கிருந்த பலரும் பாடலின் தாளங்களுக்கு ஏற்ப நடனமாடத் தொடங்கினர்.
டிரம்ப் கையில் இராணுவ வாளுடன் நடனம் ஆடிக்கொண்டு, கேக் வெட்டிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அத்துடன், பதவியேற்றுக்கொண்ட உற்சாகத்தில் அவர் தன்னுடைய மனைவி மெலனியா டிரம்ப் உடனும் கைகோர்த்து ஜோடியாக நடனம் ஆடினார். குறித்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


