ரொறன்ரோவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரொறன்ரோ பெரும்பாகம் மற்றும் யோர்க் பிராந்தியங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆபரணங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பெறுமதியான பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொருவர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.