TamilsGuide

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகரான பிரான்சிஸ்கோ சான் மார்டின் மரணம்

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகராவார் பிரான்சிஸ்கோ சான் மார்டின் . இவர் டேஸ் ஆஃப் அவர் லைவ்ஸ் {Days of Our Lives} என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆவார். இவர் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு வயது 39 ஆகும்.

இவருக்கு திரைத்துறையில் சேர்ந்த பலர் அஞ்சலி செலுத்தினர். இவருடன் நடித்த சக நடிகர்கள் அவரைப் பற்றி எழுதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தற்கொலை அனைத்திற்கும் தீர்வு அல்ல. உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் 9152987821 இந்த எண்ணுக்கு அழைக்கவும்.
 

Leave a comment

Comment