TamilsGuide

விடாமுயற்சி படத்தின் விநியோகஸ்தர் உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் நிறுவனம்

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் பாடல்களான சவதீகா மற்றும் பத்திகிச்சு பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் உரிமையை பிரபல நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது.
 

Leave a comment

Comment