TamilsGuide

ஒரு நபர், மாயப்பெண், மரணமற்ற நபர் மற்றும் பிளிறும் இரயில் - ஏழு கடல் ஏழு மலை டிரெய்லர் வெளியானது

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் ராம் மிக முக்கியமானவர். இவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு வாழ்க்கையின் தீஸிஸ் என்று சொல்லலாம். சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து படங்களை இயக்குவார்.

ராம் தற்பொழுது ஏழு கடல் ஏழு மழை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டு பல விருதுகளை வென்றும், சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றது.

படத்தின் சில பாடலும் டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் வித்தியாசமாக ஃபேண்டசி அம்சந்த்துடன் காட்சிகள் அமைந்துள்ளது. ஒரு ரயிலில், சூரி, நிவின் பாலி, அஞ்சலி மற்றும் எலி என கதாப்பாத்திரமே மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment