TamilsGuide

NEEK திரைப்படத்தை பார்த்துவிட்டு எஸ்.ஜே சூர்யா தனுஷிடம் கேட்ட அந்த கேள்வி?

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த எஸ்.ஜே சூர்யா படத்தை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது " சர்வதேச நடிகர், இயக்குனரான தனுஷ் சாருடன் திரைப்படத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. திரைப்படம் இளம் தலைமுறைகளுக்கான ஃபன், எமோஷன் என்ன மிகவும் கலகலப்பாக இருந்தது. தனுஷ் சார் உங்களிடம் ஒரு கேள்வி எப்படி இப்படி ஒரு திரைப்படத்தை உங்களுக்கு இருக்கும் கடினமான டைம் ஸ்கெடியூலில் இயக்க முடிந்தது அதுவும் ராயன் மாதிரி ஒரு திரைப்படத்தை இயக்கிய பிறகு. படத்தில் நடித்த அனைத்து இளம் நடிகர்களுக்கும் எனது பாராட்டுகள்"
 

Leave a comment

Comment