TamilsGuide

இனவாதத்தை நிராகரித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆனால் எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் அதனை முன்னெடுக்க போவதில்லை

எமக்கு எந்தவித பாதிப்புகள் வந்தாலும் நாம் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என்ற உத்தர வாதத்தை நான் உங்களுக்கு தருகின்றேன்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் அரசியல் நெருக்கடி மாற்றப் பட்டுள்ளது

இருப்பினும் பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடிகள் காணப்படுகின்றன இவற்றை நாம் வேகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது

நாம் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது சமூக மாற்றத்தின் பிரதான பங்கினை இலக்கியவாதிகள் வகிக்கின்றனர்

எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் பலமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது அரசியல் முரண்பாடுகள் ஆனது தேர்தல் நிறைவடைந்த பின் அவை கைவிடப் பட வேண்டும்

மக்களுக்காக நாம் இன மத மொழி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும் இதனை மாற்றி அமைத்து நாம் சரியான திசைக்கு மக்களை வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்கின்றோம் என

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
 

Leave a comment

Comment