TamilsGuide

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் யடவத்த, உக்குவெல, ரத்தோட்ட மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று (19) காலை 8:00 மணி முதல் நாளை காலை 8:00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, பொது மக்கள் மண்சரிவு, கற்கள் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள் சரிந்து வீழ்தல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment