TamilsGuide

கிளீன் ஸ்ரீலங்கா – எட்டு கடைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

கந்தளாய் பிரதேசத்தில் 2025 ம் ஆண்டுக்கான பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் பல உணவகங்கள் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்கள் .

கந்தளாய் பொது சுகாதார பிரிவினரால்  நேற்று 46 கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

கந்தளாய் நகரம் ,பேராறு ,வெண்டாரசன் புர, வான் எல ,ரஜ எல , வட்டுக்கச்சி ,அக்போபுர போன்ற பிரதேசங்களில்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .

பேக்கரிகள் உணவகங்கள் சில்லறை கடை கோழி இறைச்சிக் கடை மற்றும் மரக்கறிக் கடைகளுக்கும் உரிய தரம் இல்லாத எட்டு கடைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக கந்தளாய் தலைமை நிர்வாக பொது சுகாதார மருத்துவ அலுவலர் திரு. டேனி சமன் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment