மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `ககன மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .
அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருள்.
ககன மார்கன் குடும்பமாக வந்து பார்த்து மகிழக் கூடிய படமாக இருக்கும். விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன், அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தின் வில்லனாக நடித்து இருக்கும் அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான சொல்லிடுமா வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை லாவர்தன் வரிகளில் விஜய் ஆண்டனி பாடியுள்ளார். பாடல் மிகவும் வைபாகவும் துள்ளலாக அமைந்துள்ளது.
திரைப்படம் விரைவில் தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.