TamilsGuide

மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதைக் கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்

மியான்மாரிலிருந்து வருகை தந்துள்ள ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி  மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பாக இன்று (07) பொது மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு விவசாய சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைவாக இடம்பெற்ற இப்போராட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம், விவசாய சம்மேளன தலைவர் சுந்தரேசன் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ” மியான்மாருக்கு ரோஹிங்கிய அகதிகளை திருப்பி அனுப்பாதே, இலங்கை அரசே சர்வதேச சட்டங்களை அமுல்படுத்து,  போன்ற பல்வேறு வாசகங்கள் ஏந்தியவாறு  போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டமானது சுமார் ஒரு மணித்தியாலம் வரை  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment