TamilsGuide

ஜெயிலர் 2 புது வீடியோ வெளியிட்ட படக்குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.

ஜெயலிர் படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே இயக்குநர் நெல்சன் தெரிவித்து இருந்தார். இடையில் ரஜினிகாந்த் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

சமீபத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் சென்னை , கேரளா, பெங்களூரு மற்றும் பல இடங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ப்ரோமோ வீடியோவில் அனிருத் மற்றும் நெல்சன் திலிபிகுமார் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெயிலர் 2 ப்ரோமோ வீடியோவை படமாக்கும் போது எடுத்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 
 

Leave a comment

Comment