TamilsGuide

விடைத்தாள் மதிப்பீடு - ஆசிரியைகள் அணிந்து வந்த ஆடைகளால் பரபரப்பு

பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வருகை தந்த ஆசிரியைகள் கவுன் ஆடை அணிந்து வந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (16) பாடசாலை நடைபெறும் நாள் என்ற காரணத்தினால், பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், ஆசிரியைகள் கவுன் அணிந்து வந்துள்ளார்கள் எனவும்,  இதனால் அவர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் இடம்பெறுவதால், இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை என  குறித்த  ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனால் இரு குழுக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும், இதனையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment