TamilsGuide

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவானின் உத்தரவுக்கு அமைவாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதன்படி, 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 2 சரீரப் பிணையில் உதயங்க வீரதுங்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

அண்டை வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம், கடந்த 10 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment