கனடாவின் முன்னணி மளிகை பொருள் விற்பனை நிறுவனங்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல சங்கிலி தொடர் பல்பொருள் அங்காடிகளான லோப்ளவுஸ், வால்மார்ட் மற்றும் சோபிஸ் ஆகிய நிறுவனங்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இறைச்சி விற்பனையின் போது இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இறைச்சியின் எடை தொடர்பில் மோசடி இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கனடிய மக்கள் கூடுதல் விலைக்கு இறைச்சி கொள்ளளவு செய்ய நேரிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இறைச்சி பொதிகளில் குறிப்பிடப்படும் எடைகள் சரியானவை அல்ல எனவும், குறைந்த எடையைக்கொண்ட இறைச்சிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் கனடியர்கள் இறைச்சிக்காக கூடுதல் தொகையை செலவிட நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.