TamilsGuide

அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ள கனடா

அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை மாற்ற அழுத்தம் தந்தாலே மற்றும் கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என கனடா எச்சரித்துள்ளது.

மேலும், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் மின்சாரம், எரிபொருட்கள் என அனைத்தும் நிறுத்தப்படுமெனவும் கனடா தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கவுள்ள ட்ரம்ப், சமீபத்தில் கனடா, பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்றும் கனடாவிற்கு கூடுதல் வரி விதிக்கப்படுமெனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்ப், கனடாவின் பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்க முடிவு செய்தால், அமெரிக்காவால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என கனடா எச்சரித்துள்ளது.

மேலும், கனடாவின் பதிலடி பயங்கரமாக இருக்கும் என்றும் இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கையை கனடா ஏற்கனவே முன்னெடுத்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கையைப் பொறுத்து அமெரிக்காவிற்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment