TamilsGuide

மீண்டும் இணையும் வாத்தி கூட்டணி

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கினார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் உலகளவில் 110 கோடி ரூபாய் வசூலித்தது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி மீண்டும் நடிகர் தனுஷுடன் இணைந்து திரைப்பட இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment