இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த வீடியோவில் விஜய் சேதுபதி ரெயில் ஒன்றினுள் நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வீடியோவின் இறுதியில் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார். இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.