மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் திரைப்படத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். இதுவே இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும்.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது நகைச்சுயான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் முதல் பாடலான ஸீரோ பேலன்ஸ் ஹீரோ பாடல் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தற்பொழுது படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான கண்ண கட்டிகிட்டு பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை வைசாக் வரிகளில் ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.