TamilsGuide

2025 ஹஜ் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்து

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் ஹஜ் யாத்திரை – 2025க்கான ஒப்பந்தத்தில் இலங்கை அண்மையில் கையெழுத்திட்டது.

இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் இலங்கை முஸ்லிம்களின் புனித யாத்திரை அனுபவத்தை மேம்படுத்துவதில் இரு அரசாங்கங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சரின் அழைப்பின் பேரில் அமைச்சர் செனிவி சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முந்திய இருதரப்பு சந்திப்பின் போது, ​​தனது குடிமக்களுக்கான ஹஜ் யாத்திரை அனுபவத்தை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்தை அமைச்சர் செனிவி வலியுறுத்தினார்.
 

Leave a comment

Comment