கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாகாண முதல்வர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்பு குறித்து விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
அனைத்து மாகாணங்களிலும் முதல்வர்கள் பிரதமருடன் சந்திப்பு நடத்த உள்ளனர் குறிப்பாக கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிக்கப்படும் என அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி டிரம்ப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கும் வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்த முக்கிய விடயங்களை ஆராயும் நோக்கில் பிரதமர் ட்ரூடோ மற்றும் மாகாண முதல்வர்கள் கலந்த ஆலோசனை செய்ய உள்ளனர்.