TamilsGuide

திருக்குறள் உலகப்பொதுமறை, ல்லா மதத்துக்கும் பொதுவானது - வைரமுத்து

வெற்றித் தமிழர் பேரவை
பெசன்ட் நகரில்
திருவள்ளுவர் திருநாள்
கொண்டாடியது

நானூறுக்கு மேற்பட்ட
தமிழன்பர்கள்
நெல்மூட்டையின்
நெல் மணிகளாய்
நெருங்கியிருந்தார்கள்

திருவள்ளுவர் மையங்களை
உலகமெங்கும் அமைப்பதாக
அறிவித்திருக்கும்
இந்தியப் பிரதமர்
நரேந்திரமோடிக்கு
நன்றி சொன்னேன்;
ஒரு வேண்டுகோளும் விடுத்தேன்.

"திருக்குறள் உலகப்பொதுமறை;
எல்லா மதத்துக்கும் பொதுவானது;
அதை
ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே
சொந்தம் கொண்டாடுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.
இது இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு என்றேன்

திருக்குறள் உரை
எழுதத் தொடங்கிவிட்டேன்.
சொல்லுக்குள் நுழைந்து
பொருளுக்குள் புகுந்து
அறிவுக்குள் விரிந்து
எழுதிக் கொண்டேயிருக்கிறேன்;
ஜீலையில் வெளியிட்டுவிடுவேன்"
என்று அறிவித்தேன்

நிறைவாக 
திருவள்ளுவர் என்று
நான் ஓங்கி ஒலித்ததும்
கூட்டம் வாழ்க என்றது.
திருக்குறள் என்று
நான் ஓங்கி ஒலித்ததும்
கூட்டம் வெல்க என்றது

பறவைகள்
வழிமொழிந்ததாகவும்
திருவள்ளுவர் சிலை
புன்னகை பூத்ததாகவும்
எங்களுக்குத் தோன்றியது


வைரமுத்து
@Vairamuthu

Leave a comment

Comment