TamilsGuide

கேம் சேஞ்சர் படத்தில் எனக்கு திருப்தியில்லை - இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது.

இந்நிலையில், இந்த படம் தொடர்பாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ஷங்கர், "கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்னும் சிறப்பாக பண்ணியிருக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை. படத்தில் மொத்தமாக 5 மணிநேர காட்சிகள் இருந்தது. இதனால் படத்தில் பல நல்ல காட்சிகளை வெட்டி நீக்க வேண்டியிருந்தது.

இயக்குநர் ஷங்கரின் இந்தப் பேச்சு இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. 
 

Leave a comment

Comment