TamilsGuide

கண்டி மாணவி கடத்தல் சம்பவம்-சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை

கண்டி – தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் மகளும், அவரை கடத்திய சந்தேக நபரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் நேற்று கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் கடத்தப்பட்ட மாணவியும் சந்தேக நபரும் நேற்று அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்

இதேவேளை கண்டி – தவுலகல பகுதியில் தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த சனிக்கிழமை குறித்த பாடசாலை மாணவி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment