TamilsGuide

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த இ.தொ.கா தலைவர்

அயலக தமிழர் மாநாடு இன்று சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கை வாழ் தமிழர்களின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு தமிழக முதலமைச்சர் செய்த உதவிகளை நினைவுகூர்ந்தார்.

மேலும் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு செந்தில் தொண்டமான் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
 

Leave a comment

Comment