TamilsGuide

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குருநகர் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து , சக தொழிலாளிகள் படகினை ஊர்காவற்துறை கடற்கரைக்கு திருப்பி , சுகவீனமுற்ற தொழிலாளியை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அதன் போது, தொழிலாளி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டதை தொடர்ந்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment