TamilsGuide

துபாய் கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் - துள்ளி குதித்து கொண்டாடிய நடிகர் அஜித்

துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது. தற்போது மூன்றாவது இடம்பிடித்துள்ள அஜித் குமார் ரேசிங் அணிக்கு அஜித் குமார் உரிமையாளராக மட்டுமே செயல்பட்டார்.

கார் பந்தயத்தில் மூன்றாவது இடம்பிடித்த நடிகர் அஜித் குமார் ரேசிங் அணிக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அஜித் குமார் வெற்றியை கொண்டாடிய தருணங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment