TamilsGuide

இனி அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது

அரிசி இறக்குமதி செய்வதற்கு இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (11) லுனுகம்வெஹெர, பன்னேகமுவ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்வது தொடர்பான சுற்றறிக்கை மேலும் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் நேற்று (10) நள்ளிரவுடன் முடிவடைந்தது.

அதன்படி, நேற்று நள்ளிரவு நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கம் மூலம் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெற்றிக் தொன்களை கடந்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 66,000 தொன் பச்சை அரிசி மற்றும் 101,000 தொன் புழுங்கல் அரிசி ஆகியவை அடங்கும்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெற்றிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment