TamilsGuide

ரயில் பாதைகள் மீண்டும் சீரமைப்பு

நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து செயற்பாடுகள் வழமைபோல இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரவு அஞ்சல் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த ரயில் ஆகியவை தற்போது மீண்டும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலவும் வானிலை காரணமாக இன்று ஓஹியா மற்றும் இடல்கஷின்னா ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட நிலச்சரிவு ரயில் போக்குவரத்தை பாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment