TamilsGuide

2025ல் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறும் பெரும் கோடீஸ்வரர்கள்... வெளியான ஆய்வறிக்கை

2025ல் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள், சுமார் 142,000 பேர்கள் வேறு நாடுகளுக்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்களில் ஒவ்வொருவரும் 1 மில்லியன் டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை முதலீடு செய்யக்கூடிய சொத்துக்களைக் கொண்டவர்கள். இவர்கள் உலகளாவிய நிதி மற்றும் புவியியல் போக்குகளை மறுவடிவமைத்து வருவதாக புதிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

2024ல் இதுபோன்று 134,000 பேர்கள் குடிபெயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் இத்தாலி நோக்கி நகர்ந்துள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.

ஆனால் பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்தே பெரும் செல்வந்தர்கள், வேறு நாடுகளுக்கு குடியேறியுள்ளனர். 2022ல் மட்டும் பிரித்தானியாவில் இருந்து அதிக சொத்து மதிப்பு கொண்ட 1,600 கோடீஸ்வரர்கள் வெளியேறியுள்ளனர்.

2023ல் இந்த எண்ணிக்கை 3,200 என அதிகரித்துள்ளது. 2024ல் இது 9,500 என மூன்று மடங்காக மாறியுள்ளது. கடந்த 2013ல் இருந்தே, கோடீஸ்வரர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு குடியேறுவது என்பது 178 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதாவது 51,000 எண்ணிக்கையில் இருந்து தற்போது 2025ல் அது 142,000 என எட்டியுள்ளது. இந்தப் போக்கு என்பது உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார உறுதியற்ற நிலை, டிஜிட்டல் முன்னேற்றங்கள் மற்றும் முதலீட்டு இடம்பெயர்வு திட்டங்களால் ஏற்பட்டுள்ளது.

கோவிட் காலகட்டத்தில் மட்டும் இந்த இடம்பெயர்வு எண்ணிக்கை சரிவடைந்து காணப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் எண்ணிக்கை வேகமெடுத்தது என்றே கூறப்படுகிறது.

மேலும், 2024ல் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் நடந்த தேர்தல்கள் அரசியல் களங்களை மாற்றியுள்ளதால், பெரும் செல்வந்தர்கள் நிலையான மற்றும் திட்டமிட்ட மாற்றங்களைத் தேடத் தொடங்கினர் என்றே ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

Leave a comment

Comment