TamilsGuide

காலவரையறையின்றி மூடப்படும் பல்கலைக்கழகம்

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 சிரேஸ்ட பிக்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வகுப்புத்தடையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment