TamilsGuide

குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

யோகிபாபு அடுத்தக்கட்டமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கியுள்ளார். இவர் கடந்த மாதம் மாரடைப்பால் காலமானது வேதனையளிக்கும் ஒன்று. படத்தின் சில பாடல்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

Leave a comment

Comment